ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

விருதுநகர் மாவட்டத்தில்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள தரம் உயர்த்த கலசலங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மற்றும் அறிவியல் கல்லூரிகள், 50 பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றின் கல்வித் தரம் உயர்த்தும் தொடர் திட்டப் பணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து

News image
Updated On :26 டிசம்பர் 2012, 3:18 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகள், 50 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 50 பாலிடெக்னிக்குகளின் கல்வித் தரம் உயர்த்தவும், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு சுலபமாக கல்விக் கடன் கிடைப்பதற்காக யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் ஜனவரி 5-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள இருப்பதாக துணை வேந்தர் பி.கன்னியப்பன் (படம்) புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து துணை வேந்தர் பி.கன்னியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகள், 50 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 50 பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றின் கல்வித் தரம் உயர்த்தும் தொடர் திட்டப் பணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது. இந்த ஒப்பந்தப்படி, மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, கணினி பயிற்சி, பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்கூட வசதி, ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில் உள்ள புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய கண்டு பிடிப்புகள் குறித்த சிறப்பு பயிற்சி மற்றும் பல தேவைக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு, ஏழை எளியவர்கள் உயர்கல்வி பெற்றிட கல்விக் கடன் வழங்க யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். இதன் மூலம் இந்தியாவில் எங்கிருந்தாலும், அவர்களுக்கு அங்குள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை மூலம் கடன் தொகை உடனே வழங்க, பல்கலைக்கழத்திலேயே விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து அனுமதி வழங்கப்படும்.

இதற்கான விழா பல்கலைக்கழகத்தில் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் ஜனவரி மாதம் 5-ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் புதுதில்லியில் உள்ள வருவாய்த்துறை ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் கலந்து கொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளின் முதல்வர்கள், தலைமை ஆசிதரியர்கள், ஒப்பந்த பணி-உறவு ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.இதற்கான ஏற்பாடுகளை பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் தலைமையில் பேராசிரியர்கள் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.